Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு ராகுல் தூதா? ராகுலுக்கு ரஜினி தூதா?

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (23:04 IST)
இந்திய அரசியல் அரங்கில் ராகுல்காந்தி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ ஆகிவருகிறார் குறிப்பாக ராகுல்காந்தியை தமிழக பிரமுகர்கள் சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் சமீபத்தில் ராகுல்காந்தியை சந்தித்தவர்கள்
 
இதில் முதல் இரண்டு பேர் ராகுலை சந்தித்தது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான அச்சாரமாக இருக்கலாம். ஆனால் இயக்குனர் ரஞ்சித் சந்தித்தது எதனால்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஒருசிலர் ரஜினியை காங்கிரஸ் பக்கம் வளைத்து போடவே ராகுல்-ரஞ்சித் சந்திப்பு நடந்ததாக கூறி வருகின்றனர்.
 
ஆனால் இந்த சந்திப்பு குறித்து பீட்டர் அல்போன்ஸ் சற்று வித்தியாசமான கருத்தை கூறினார். அதாவது,  'ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்று விரும்பி அப்பாயின்மெண்ட் கேட்டது ரஞ்சித் தான். எனவே ரஜினிதான், ராகுல்காந்தி பக்கம் செல்ல ரஞ்சித்தை தூது விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது' என்று கூறியுள்ளார். உண்மையில் ராகுல்-ரஞ்சித் சந்திப்பில் என்ன நடந்தது? என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments