Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (14:18 IST)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 303 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. ஒருசில மாநிலங்களில் 100% முழு வெற்றியையும் பெற்ற பாரதிய ஜனதா கட்சியால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த தேர்தல் முடிவு தமிழகம் எப்போதுமே பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக இருப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை இன்றைய பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்துள்ளார்.
 
சென்னையில் தனது போயஸ் கார்டன் வீட்டிற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 'தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருப்பதால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார். மேலும் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோர்களை அடுத்து மக்களை கவரும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தமிழகத்தை பொருத்தவரை ஒரு அலை ஏற்பட்டுவிட்டால் அந்த அலைக்கு எதிராக யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்றும் அந்த வகையில் தமிழகத்தில் மோடிக்கு எதிராக அலை இருந்ததால் மோடியால் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார்: யோகி ஆதித்யநாத்

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments