சிறப்பாக செயல்பட்ட நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? அண்ணாமலை கேள்வி

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (15:16 IST)
சிறப்பாக செயல்பட்ட நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசியதாக பரவலான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவர் எனத்  தகவல் வெளியானது.

இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில்,  கடந்த 9 ஆம் தேதி  அமைச்சரவை மாற்றம்  நடைபெற்றது.

அதன்படி,  தமிழக அமைச்சரவையில் இருந்து  பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு  தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

புதிய அமைச்சரவையில்  டி..ஆர்.பி. ராஜாவுக்கு இடம் வழங்கப்பட்ட நிலையில்  நேற்று காலையில் அவர் அமைச்சராகப் பதவியேற்றார்.

மேலும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும், மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நிதித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு, வடமாநில ஊடகங்கள், ஆங்கில ஊடகங்களில் விவாதங்களில் கலந்துகொண்டு பேசி அனைவரின் கவனத்தைப் பெற்ற அமைச்சர் பிடிஆர்-ன் துறை மாற்றப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதில், 'சிறப்பாகப் பணியாற்றிய பானிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? ஆடியோ காரணமாக பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது தவறு. வெளியான அந்த ஆடியோவில் பிடி.ஆர் பழனிவேல் தியாகராகன் பேசியது உண்மைதான். இந்த ஆடியோ வெளியிட்டது தொடர்பாக வழக்குத் தொடர்வேன். வழக்குத் தொடர்ந்தால், நீதிமன்றத்தில் ஆடியோவின் உண்மைத் தன்மையை  நிரூபிக்க முடியுமென்று' தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments