Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணை முதல்வர்; ஒரு லிஸ்டே இருக்கு: யார் அந்த ஒருவர்?

துணை முதல்வர்; ஒரு லிஸ்டே இருக்கு: யார் அந்த ஒருவர்?

துணை முதல்வர்; ஒரு லிஸ்டே இருக்கு: யார் அந்த ஒருவர்?
, சனி, 8 அக்டோபர் 2016 (12:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி நிர்வாக சரியாக நடைபெற தற்காலிக முதல்வர் அல்லது துணை முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. அதற்கான முயற்சிகளில் அதிமுக தரப்பு ஈடுபட்டு வருகிறது.
 
அடுத்த தற்காலிக அல்லது துணை முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த பதவியை அலங்கரிக்க போகும் நபர் யார் என்ற பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் துணை முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தொடக்கத்தில் பேசப்பட்டது.
 
தற்போது அந்த பட்டியலில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் ஆகியோர்கள் பெயர்களும் உள்ளன.
 
ஒரே பதவி 6 போட்டியாளர்கள் என உள்ள இந்த பட்டியல் மேலும் விரிவடையலாம். இறுதியில் நாற்காலியை கைப்பற்ற போவது யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோக மித்ரா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் - சிறுமியின் தாத்தா