Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியின் செல்போன் எழுப்பும் சந்தேகம்: கொலையின் பின்னணி யார்?

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (08:03 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
இந்த விசாரணையில் ராம்குமார் சுவாதியை காதலித்ததாகவும், அவர் தன்னை அசிங்கமாக திட்டியதாகவும், ஆத்திரத்தில் அவரை மிரட்டுவதற்காக சென்றபோது கொலை செய்துவிட்டதாகவும் கூறினார். ஆனால் ராம்குமார் சுவாதியை காதலிக்கவில்லை. அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கருவி என பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
 
சுவாதி கொலை செய்யப்பட்ட ஜூன் 24-ஆம் தேதி இரவே ராம்குமார் அவரது சொந்த ஊரானா நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திற்கு புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. காவல்துறை ராம்குமாரை கைது செய்த போது சுவாதியின் செல்போனை ராம்குமார் வீட்டிலிருந்து கைப்பற்றியதாக கூறுகின்றனர்.
 
ஆனால் சுவாதி கொலை செய்யப்பட்ட மறுநாள் ஜூன் 25-ஆம் தேதி அவரது செல்போன் சென்னையில் ஆன் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் சில நிமிடங்களில் ஆஃப் செய்யப்பட்ட சுவாதியின் செல்போன் அப்போது யாரிடம் இருந்தது.
 
கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சுவாதி மைசூர் சென்றதாக அவரது செல்போன் டவர் காட்டுகிறது. சுவாதி அங்கு யாரை பார்க்க சென்றார். யாருடன் சென்றார் என பல சந்தேகங்களுக்கு காவல்துறை பதில் கூறாமல் மௌனமாக இருக்கிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments