Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா எப்போது பொதுச் செயலாளராக பதவி ஏற்கிறார்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (00:07 IST)
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வருகின்ற 31ஆம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் முதன்முறையாக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு தீர்மானத்தை பெற்றுக் கொண்ட சசிகலா பதவி ஏற்க சம்மதம் தெரிவித்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பதவி ஏற்பு விழா தலைமை அலுவலகத்தில் தான் நடைபெறும். இது தொடர்பான ஆலோசனை தான் தற்போது நடந்ததாக கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் வரும் 31ம் தேதி சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments