Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் எப்போது? வெளியான தகவல்

Sinoj
வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:07 IST)
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 
''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 - HALL TICKET DOWNLOAD”என்ற வாசகத்தினை "Clok" செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் / நிரந்தரப் பதிவெண்  மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
மார்ச்/ஏப்ரல் 2024பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் (Science Practical Examinations) 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி தேர்வரும் தேர்வெழுத  அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 
மார்ச்/ஏப்ரல்-2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம்.''என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments