Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்து வரும்போது ஒன்று சேர்ந்து தான் எதிர்க்க வேண்டும்- கமல்ஹாசன்

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (19:13 IST)
நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
 
இதையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.  தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை தென்சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
 
ஆபத்து வரும்போது ஒன்று சேர்ந்து தான் எதிர்க்க வேண்டும்.  ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது என் கடமை. நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய அரசு திராவிட மாடல் அரசு என்று கூறினார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேட்டால் பதிலில்லை. நேரு என்ன செய்தார் என்பதைப் பற்றி கூறி வருகின்றனர் என்று கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments