Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி? அரசு தகவல்

Sinoj
திங்கள், 4 மார்ச் 2024 (17:17 IST)
சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில்  அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம்  வரும்  புதன்கிழமை(6--03-2024) முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்.

''இணைய தளம் மூலம் அனுமதிச் சீட்டுபெற்றுப் பார்வையிடலாம்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் சென்னை,மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில்அமைக்கப்பட்டு. 26-2-2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து முத்தமிழறிஞர்கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அதனுடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப்பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிடவளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறுஅரங்கங்களுடன் "கலைஞர் உலகம்" என்னும் அருங்காட்சியகம்அமைக்கப்பட்டுள்ளது.அரசியல் கலைகலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின்நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒருபுகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல்,அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத்தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச்சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திரநாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள்இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள்பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல்அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின்https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal)உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள்பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் கலைஞர் உலகம்இலவசமாக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
 
ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் நிலவறையிலுள்ள கலைஞர் சீட்டுடன் வருபவர்களுக்கு உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
 
மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.
 
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை நவீன தமிழ்நாட்டின் சிற்பி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், ஓய்வில்லாமல் தமிழ் மக்களுக்காக உழைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையினைப் பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பினை நல்கி கண்டு களித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள'' என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments