Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் எப்போது சென்னைக்கு வருவார்? உண்மையை உடைத்த சுதீஷ்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (11:36 IST)
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் எப்பொழுது சென்னைக்கு திரும்புகிறார் என்பது குறித்து தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன.
 
தமிழத்தில் திமுக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் மதிமுக ஒரு அணியாவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாக போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி ஏறக்குறைய அறிவிக்கபடாத ஒன்றாக உள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக மற்றும் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் பேசுகையில்,  அமெரிக்காவில் இருக்கும் தலைவர் விஜயகாந்த் இன்னும் இரண்டு வாரங்களில் சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்புகிறார்.
 
கேப்டன் அவர்கள் சென்னைக்கு திரும்பியதும், அவருடன் கலந்தாலோசித்து, கூட்டணி குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments