Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’வாட்ஸ் ஆப்பில் ’’ மெசேஜ் அனுப்பி தூக்கில் தொங்கிய இளைஞர் !

Webdunia
ஞாயிறு, 9 ஜூன் 2019 (12:02 IST)
சென்னை அமந்தகரை எம்.எம்.காலனியில் வசித்து வந்தவர் ரவி (45). இவரது மகன் ஏழுமலை(20). இவர் அசோக்நகரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் வேலை செய்துவந்தார்.
வழக்கம் போல் நேற்று முந்தினம் வேலைமுடிந்து வீட்டுக்குவந்த ஏழுமலை தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரமாக அவர் கதவைத் திறக்காததால்  பெற்றோர் கதவை உடைத்துக்கொண்டு சென்று உள்ளே பார்த்தனர்.
 
அந்த அறையில் ஏழுமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகன் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சத்தம்கேட்டு அருகில் உள்ளோர் ரவியின் வீட்டுக்கு வந்தனர்.
 
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அமைந்தகரை போலீஸார் தூக்கில் தொங்கிய உயிரிழந்த ஏழுமலையின் உடலை மீட்டு உடல்கூறி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் இவ்வழக்கைப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர், அதில் ,ஒரு பெண்ணை ஏழுமலை ஒருதலையாகக் காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் காதலைக்கூறியும் அவர் ஏற்காததால் ஏழுமலை மனம் உடைந்துபோய்இருந்தார். இதனால் தான் தற்கொலை செய்யப்போவதாக நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது வீட்டில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்று கொள்வேன்: முதல்வர் பதவி குறித்து ஷிண்டே..!

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments