Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு என்ன உரிமை இருக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (07:34 IST)
தமிழகத்தில், ஹிந்தி உள்ளிட்ட வட மொழிகளை அனுமதிக்க கூடாது, இது மொழி திணிப்பு எனவும், அதனை அடித்து விரட்டுங்கள் எனவும் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் கருணாநிதி தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 
 
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்தி கற்க அனுமதித்த கருணாநிதி சாமானிய மக்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு என்ன உரிமை உள்ளது என கூறியுள்ளார்.
 
ஹிந்தி மொழியை அனுமதிக்காததால் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் மொழி என்ன வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் கருணாநிதி மொழி பிரச்னையை வைத்து கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
 
டெல்லியில் நான் ஹிந்தி படிக்கக்கூடிய அதே ஆசிரியரிடம் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஹிந்தி படித்ததை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன் திமுக கடைபிடித்து இருக்கிறதா?.
 
ஹிந்தி தெரியும் என்ற காரணத்தால் இவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம் என்று கருணாநிதியே சொல்லி இருக்கிறார். அமைச்சர் பொறுப்பு கொடுப்பதற்கு ஹிந்தி ஒரு தகுதி என்று சொல்லும் கலைஞர், ஏழை வீட்டு மாணவர் அதை படிக்கக்கூடாது என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என பேசியுள்ளார் மத்திய அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணன்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தஞ்சையில் பரபரப்பு..!

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments