ஊரடங்கு நீட்டிப்பின் போது என்னென்ன தளர்வுகளுக்கு வாய்ப்பு?

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (14:34 IST)
ஊரடங்கு 7 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் நீட்டிப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 7 ஆம் தேதி வரை தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் ஊரடங்கு இதே போல தொடராது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 
 
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை கடுமையாக அமல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன்படி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இது குறித்த அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 
 
இதனிடையே, ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதாக தகவல். அதன்படி, 
 
1. ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்கள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி 
2.  மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை
3. வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம். 
4. பேருந்து போக்குவரத்து தவிர  வாடகை டாக்ஸிகள் மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதி
5. ஒரு மண்டலத்தில் இருந்து மறொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் முறை நீடிக்கும்
6. சென்னையை பொருத்த வரை சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments