Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் இனிஷியலை மாற்ற ஸ்டாலினுக்கு என்ன அருகதை உள்ளது ? பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (23:32 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். சில இடங்களில் வரம்புமீறி பேசி வழக்குகளும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான  பொன்.ராதாகிருஷ்ணன்,என் இனிஷியலை மாற்ற ஸ்டாலினுக்கு என்ன அதிகாரன் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் இன்ரு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜாண் தங்கம் ஆகியோர் இன்று திறந்த வெளிவாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் பிரசாரம் செய்தபோது என் பெயரைக் குறிப்பிடும்போது, பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை பொய். ராதாகிருஷ்ணன் என்று கூறினார்.என் தந்தையார் பெயர் பொன்னையா நாடார் என்பதை நான் பொன் என்று போட்டுக்கொண்டேன். என் இனிஷியலை மாற்ற அவருக்கு என்ன அதிகாரம் உண்டு?? இதை நான் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments