Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (08:05 IST)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று 10 தொகுதிகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் அக்கட்சியில் தலைமை ஈடுபட்டுள்ளது. அதிமுக கூட்டணியை பொருத்தவரை கிட்டத்தட்ட கூட்டணி முடிந்துவிட்டது. தேமுதிக வந்தால் சேர்த்து கொள்ளப்படும் அல்லது தேமுதிக இல்லாமல் போட்டியிடும்

ஆனால் திமுக கூட்டணியில் அப்படியில்லை. இன்னும் சுமார் அரைடஜன் கட்சிகளுக்கு தொகுதியை பிரித்து கொடுக்கும் பணி உள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட், சிபிஐ, மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் இருப்பதாக கூறிக்கொள்ளும் மதிமுகவும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளுமா? என்பது சந்தேகமே!

மேலும் இந்த கூட்டணியில் மமக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் அதிமுகவிடம் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தேமுதிக, தமாக ஆகிய கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே இத்தனை கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்தது போக திமுகவுக்கு 15 தொகுதிகளாவது மிஞ்சுமா? என்ற அச்சம் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.  இன்னும் ஒருசில நாட்களில் என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments