Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாச்சியை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (16:15 IST)
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அண்ணாச்சியை சிறைக்கு தள்ளிய ஜீவஜோதி தற்போது என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தன் கடையில் பணிபுரிந்த மேலாளரின் மகள் ஜீவஜோதியை அடைய நினைத்தார். ஆனால் ஜீவஜோதி  தான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரை கரம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் கூல்லிப்படையை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.
 
இந்த வழக்கில் சிக்கிய ராஜகோபாலுக்கு 2009ல் சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், 10 ஆ‌ண்டு ‌ சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. இதைத்தொடர்ந்து ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் 2 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பிணையில் வெளியே வந்தார்.
 
இந்த வழக்கு அப்பீலுக்கு உயர் நீதிமன்றம் சென்றபோது அவருக்கு ஆயுள்தண்டனை கிடைத்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் அப்பீல் செய்திருந்தார். நேற்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டையை உறுதி செய்ததோடு ஜூலை 7ஆம் தேதிக்குள் ராஜகோபாலை சரணடைய உத்தரவிட்டது.
 
இந்நிலையில் ஜீவஜோதி இப்போது எங்கு இருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜகோபால் சிறைக்கு அனுப்பிய பின்னர், ஜீவஜோதி தனது நீண்ட நாள் நண்பர் தண்டபாணியை இரண்டாவதாக திருமணம் செய்து தஞ்சாவூரில் செட்டிலானார். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆசை ஆசையாய் பரணி என பெயர் சூட்டினர். ஆனால் குழந்தை பிறந்து சில மாதங்களில் உயிரிழந்தது. 
 
ஏற்கனவே ஒரு உயிரை பறிகொடுத்த ஜீவஜோதி, தனது குழந்தையின் இழப்பால் மீண்டும் மீளா துயரத்திற்கு தள்ளப்பட்டார். பின்னர் அதிலிருந்து மீண்டு பரணி என்ற பெயரில் ஒரு ஹோட்டலை துவங்கினார். இதற்கிடையே அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. தற்போது ஜீவஜோதி தஞ்சையில் டெய்லரிங் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments