Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்-கமல் சந்திப்பால் திமுக கூட்டணியில் குழப்பமா?

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (07:38 IST)
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியால் கூட்டணிக்கு பெரிய பலன் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை விட்டுத்தர வேண்டிய நிலை உள்ளதால் திமுகவுக்கு கிடைக்கும் தொகுதிகள் குறைவாக இருப்பதாகவும் ஏற்கனவே திமுக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 தொகுதிகள் ஒதுக்கியது. ஆனால் காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் திமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டது
 
எனவே காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் கழட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.
 
எனவே திமுக, கூட்டணியில் இருந்து விலக்கினால் தனித்து விடப்படுவோம் என்ற பயத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு கமல் சந்திப்பு ஒரு துடுப்பு போன்று ஆறுதலை தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
 
வரும் தேர்தலில் காங்கிரஸ், கமல் கட்சியுடன் இன்னும் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அது திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments