Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் கருணாநிதிக்கு என்ன ஆச்சு?: இது தான் பிரச்சனையா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு என்ன ஆச்சு?: இது தான் பிரச்சனையா?

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:47 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
அந்த செய்தி குறிப்பில், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள்.
 
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு முதுமை காரணமாக தற்போது அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக பேசப்படுகிறது. சிறுநீர் கழிக்கும் பாதையில் தொற்று, அதிகமான காய்ச்சல் என திமுக தலைவர் கருணாநிதி அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவரின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்தார். இதில் ஒரு சில மருத்துகள் அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் அவரது உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் தான் தொண்டர்கள் யாரும் அவரை பார்க்க வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments