Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் சொல்லும் பொய்களை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா.? முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

Senthil Velan
புதன், 13 மார்ச் 2024 (13:35 IST)
தேர்தல் நேரத்தில் வந்து பொய்களை சொன்னால்,  அதை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன ஏமாளிகளா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 
 
கோயம்புத்தூர்,  ஈரோடு,  திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  
 
மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை நம்மால் செய்ய முடிகிறது என்றால்,  ஒத்துழைப்பு கொடுக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை திமுக செய்யும் என்றார் என்றார்.  
 
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார் என்றும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே,  ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் என்ற உங்களது உத்தரவாதத்தின் கதி என்ன என்றும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தின் கதி என்ன?  அதை சொல்லுங்கள் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
 
பாஜக தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை திமுக தடுப்பதாக,  சென்ற முறை வந்த போது பிரதமர் கூறினார்.  நாம் தடுப்பதற்கு,  அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்?  எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று அவரால் சொல்ல முடியுமா? என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ: பெங்களூரு குண்டுவெடிப்பு..! ஒருவரை பிடித்து என்.ஐ.ஏ விசாரணை..!!
 
ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் திரும்பிப் பார்க்காமல்,  தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து பொய்களை சொன்னால்,  அதை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா?  பொய்களும், வாட்ஸ்-ஆப் கதைகளும் தான் பாஜகவின் உயிர்மூச்சு என்று முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments