தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆப்பிள் ஐஃபோன்களுக்கான உதிரி பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் பல்வேறு பகுதிகளில் அவை அசெம்பிள் செய்யப்படுகின்றன. அப்படியாக தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் ஐஃபோன் உற்பத்தியை செய்து வருகிறது.
சமீபத்தில் சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக சண்டை ஏற்பட்டபோது சீனாவின் அதிகரித்த வரிவிதிப்புகளால் சீனாவில் உள்ள ஐஃபோன் தயாரிப்பு ஆலையை இந்தியாவிற்கு மாற்றலாமா என ஆப்பிள் நிறுவனம் யோசித்த நிலையில், இந்தியாவில் தொடங்குவதற்கு பதிலாக அதை அமெரிக்காவிலேயே தொடங்கலாமே என அதிபர் ட்ரம்ப் முட்டுக்கட்டை போட்டார்.
ஆனால் சீனாவிலோ, இந்தியாவிலோ கிடைக்கும் அளவிற்கு வேலையாட்கள் அமெரிக்காவில் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஐஃபோன் உற்பத்தி செய்வதை அதிகரிக்க உள்ளது பாக்ஸ்கான் நிறுவனம்
தமிழ்நாட்டிலிருந்து ஐஃபோன் உற்பத்தியில் ஈடுபடுவதால் பாக்ஸ்கான் நிறுவனத்தின் வருவாய் 2 மடங்கு அதிகரித்து ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் முதலீட்டை அதிகரித்து உற்பத்தியையும் அதிகரிக்க மேலும் ரூ.12,800 கோடியை பாக்ஸ்கான் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K