இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (16:45 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மழை குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம், சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல், காரைக்கால் பகுதியில் நல்ல மழை பெய்யும் எனவும், சென்னை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments