பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு.!

Mahendran
புதன், 18 டிசம்பர் 2024 (11:01 IST)
சென்னை மற்றும் சென்னையில் சுற்றி உள்ள மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக தமிழக கடற்கரை ஓர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்பதால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

காதலிக்க மறுத்த 12ஆம்வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் எதுவரை செல்லும்: அதிகாரிகள் விளக்கம்..!

மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO".. மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் கண்டனம்..!

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments