Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (14:58 IST)
புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான   பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசின் தேசியக் கல்விக் கொள்கியயை தமிழ் நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வரும் நிலையில், வரும் 2024 -2025 கல்வியாண்டு முதல் PM SHRI பள்ளித்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ''தமிழ்நாட்டில் PM SHRI பள்ளிகள் அமைப்பது தொடர்பான குழுவை உருவாக்கியுள்ளோம்.

இதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தமாகாது. புதிய கல்விக்கொள்கை தமிழ்நாடு அரசு என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதான் எங்களுடைய எண்ணம், அதை நோக்கித்தான் நாங்கள் செயல்படுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments