Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை பார்ப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை பார்ப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை பார்ப்போம்: பிரேமலதா விஜயகாந்த்
, வியாழன், 17 நவம்பர் 2016 (16:01 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை போய் பார்க்க அவர் என்ன என் கட்சிக்காரரா என கேட்ட விஜயகாந்த் அடுத்த நாளே முதல்வரை நேரில் சந்திக்க அனுமதி கிடைத்தால் போய் பார்ப்போம் என கூறினார்.


 
 
இந்நிலையில் விஜயகாந்தின் இந்த கருத்து குறித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் ஆஜராக வந்த பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார் என்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
 
மேலும், ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அனுமதி கொடுத்தார்கள் என்றால், கேப்டனுடன் சென்று சந்திப்பேன். மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் பேசிவிட்டு வர விரும்பவில்லை. ஜெயலலிதா பூரணமாக குணமடைந்த உடன் போயஸ் கார்டனுக்கு கேப்டனுடன் சென்று பார்ப்போம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் நினைத்து ஒநாயை செல்லப்பிராணியாக வளர்த்த நபர்