Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடு, மாடு மேய்பது அரசு பணியாக மாற்றப்படும் - சீமான் முழக்கம்

ஆடு, மாடு மேய்பது அரசு பணியாக மாற்றப்படும் - சீமான் முழக்கம்
, புதன், 20 ஏப்ரல் 2016 (11:39 IST)
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்பது முதல் அனைத்தும் அரசு பணியாக மாற்றப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 

 
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலா துரைப்பாண்டியனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலத்தில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
 
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்பது முதல் அனைத்தும் அரசு பணியாக மாற்றப்படும். ஒவ்வொருத்தருக்கும் என்ன வேலை தெரியுமே அதை அரசு வேலையாக மாற்றுவோம்.
 
எங்கள் ஆட்சியில் கருப்பட்டி, வெல்லம், பால், மீன் வளர்ப்பு, அனைத்தும் அரசே செய்யும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வேலை வாய்ப்பை உருவாக்குவோம். தமிழகம் இன்று சந்தையாக உள்ளதை மாற்றி உற்பத்தி நாடாக்குவோம்.
 
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் சென்னை மட்டும் தலைமையிடமாக இருக்காது. சென்னை கணினி மையம், திரைதுறை தலைநகராகும், கோவை தொழில், மதுரை கலை பண்பாடு, திருச்சி நிர்வாக தலைநகரம், கன்னியாகுமரி என்று 5 இடங்களில் தனித் தனி தலைநகரங்கள் செயல்படும். 
 
எங்கள் ஆட்சியில் யாரும் ஒரு குழி நிலம் விற்றாலும் அரசிடம் தான் விற்கவேண்டும். தனியாருக்கு விற்க முடியாது. அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வருவோம். சாலைகள் எல்லாம் பூமிக்கு அடியில் செல்லும்.
 
அரசாங்கமே மது விற்பதை ஏற்க முடியவில்லை. அதை மாற்றி கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு அனைத்தும் இலவசமாக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil