Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்காவிட்டால் எஸ்.வி.சேகரை கைது செய்வோம்: உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (13:30 IST)
நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தேசியக் கொடியை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். காவி என்றால் மோசமான நிறமா? தேசியக் கொடியிலுள்ள காவி நிறத்தை கட் செய்துவிட்டு முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவாரா? என்று கூறியிருந்தார்
 
இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சமீபத்தில் எஸ்வி சேகர் நேரில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ’தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை கைது செய்வோம் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்
 
செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ்வி சேகர் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments