Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்க அதிமுகவின் பினாமியா? வைகோ ஆவேசம்

நாங்க அதிமுகவின் பினாமியா? வைகோ ஆவேசம்

நாங்க அதிமுகவின் பினாமியா? வைகோ ஆவேசம்
, திங்கள், 14 மார்ச் 2016 (02:47 IST)
நாங்கள் அதிமுகவின் பினாமி அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
அதிமுகவின் பினாமியாக, மக்கள் நலக் கூட்டணி செயல்படுவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
 
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், எங்கள் மேடைகளில் நான் திமுகவையும், அக்கட்சி  பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் அதிகம் விமர்சிப்பதாகவும், அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றும் கூறுவது தவறு.
 
எங்களது அனைத்து கூட்டங்களிலும் அதிமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டி 30 நிமிடம் பேசுகிறேன். ஆனால் மு.க.ஸ்டாலினைப் பற்றி மட்டுமே 3 நிமிடம் மட்டுமே பேசுகிறேன்.  எனவே, மு.க.ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil