எங்களின் எதிரி யார் என்றே தெரியவில்லை: டி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (21:08 IST)
தேர்தல் களத்தில் எங்கள் எதிரி யார்? என்றே தெரியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் திமுகவின் வலிமையான எதிரி யார்? என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன், 'எங்களின் வலிமையான எதிரியாக அதிமுக தான் இருந்தது. ஆனால் தற்போது அதிமுக தொண்டர்கள் எந்த தலைவர் பக்கம் இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. தினகரனின் பக்கமும் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் இருப்பதால் எங்களின் எதிரி யார்? என்றே எங்களுக்கே  சரியாக தெரியவில்லை. ஒரு தேர்தல் முடிந்தால்தான் இந்த ஐயத்திற்கு விடை கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் பாஜகவுக்கு எதிரான கொள்கையை திமுக எடுத்து வருகிறது என்றாலும் தேர்தல் களத்தில் எங்களின் போட்டியாளராக பாஜக இல்லை என்றும், தொண்டர்கள் இருக்கும் அதிமுகவே தங்களுக்கு வலிமையான எதிரியாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments