பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்..! இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும்..! ஓபிஎஸ்.

Senthil Velan
வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:03 IST)
மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டு இருக்கிறது.
 
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஜூலையில் நாங்களே முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்வோம்...! பாஜக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம்
 
தற்போது பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு போடு இல்லனா போ!.. நான் சாவுறேன்!.. விஜய் தொகுதியில் சீமான் பிரச்சாரம்!...

புதுவையில் மீண்டும் இரட்டை எஞ்சின் அரசு: பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை..!

50 லட்சம் ரூபாய் சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு எழுத்து துறைக்கு வந்த இளம்பெண்.. அதன்பின் என்ன நடந்தது?

ஒரு முழு ரயில் பெட்டியையும் ரிசர்வ் செய்த திருமண வீட்டார்.. ஆடல், பாடல் என கொண்டாட்டம்..

வடிவேலு காமெடி நிஜமாயிடுச்சி!. ஃபில்அப் பண்ணாம வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments