Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வாரிசு அரசியல்தான் செய்கிறோம்''- திருச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (19:35 IST)
அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியாக திமுக  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில், திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் மாவட்டங்களை  மண்டலங்க்ளாக பிரிந்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட  மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் ககூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது.

திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

இந்த  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ வாரிசு கட்சி என கேட்டு கேட்டு புளித்துப் போன விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் ஆம்,  நாங்கள் வாரிசு அரசியல்தான் செய்கிறோம். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாரிசுகள் தான் நாங்கள் ‘’என்று கூறினார்.

மேலும்,  ‘’நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதைக் காட்டிலும் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்துவிட்டது. இதற்கு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments