Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு நெஞ்சைப் பதற வைக்கின்றன.! மீட்பு பணிகளை துரிதப்படுத்த கமல் கோரிக்கை..!!

Senthil Velan
செவ்வாய், 30 ஜூலை 2024 (16:12 IST)
கேரளாவில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 
 
தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ள அவர், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன என்று கூறியுள்ளார். இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: மினிமம் பேலன்ஸ் இல்லாததால் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி வசூல்.!தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.!!
 
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்  என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments