களேபரத்தில் காலியான விக்கெட்! – திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (13:47 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த உட்கட்சி விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக கட்சிகளுக்குள் கட்சி தாவல்களும், உட்கட்சி பூசல்களும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக முக்கியஸ்தர்களிடையே பல்வேறு நிலைபாடுகள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரான வி.எஸ்.விஜய் அதிமுகவிலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் அதிகமாகி வருகிறதா? அதிமுகவினர் மற்ற கட்சிகளுக்கு செல்ல தயாராகிறார்களா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அமைச்சர்கள் தனியாக சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments