Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு

இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு
, வியாழன், 8 அக்டோபர் 2015 (22:32 IST)
இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:–
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 20.9.2015 மற்றும் 4.10.2015 அன்று வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
 
இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பெயர் சேர்க்க தவறியவர்கள், அடுத்த சிறப்பு முகாம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலம், பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம்.
 
இச்சேவையினை அனைத்து தாலுக்கா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மற்றும் பொதுச் சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி விண்ணப்பங்களையும் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil