Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TVK Maanadu: கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்? - விக்கித்து நிற்கும் விக்கிரவாண்டி!

Prasanth Karthick
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (10:57 IST)

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் தொண்டர்கள் இப்போதே குவியத் தொடங்கியுள்ளதால் விக்கிரவாண்டி ஸ்தம்பித்துள்ளது.

 

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இன்று மாலை மாநாடு தொடங்க உள்ள நிலையில் காலை முதலே தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர். காலை 10 மணி முதல் தொண்டர்கள் மாநாடு பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதிகமான தொண்டர்கள் வரத் தொடங்கியதால் 8 மணிக்கே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இப்போதே ஏராளமான தொண்டர்கள் மாநாடு பந்தலுக்குள் நுழைந்துள்ள நிலையில் மகளிர், விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். முண்டியடித்து கொண்டு இடம் பிடிக்க சென்றதால் பிளாஸ்டிக் சேர்கள் உடைப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

ALSO READ: தமிழ் மக்களின் பொது மனநிலை, உறுதியான இலட்சிய அரசியல்: தவெக மாநாட்டிற்கு ஆதவ் அர்ஜூனா வாழ்த்து
 

மேலும் மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வர வேண்டாம் என்று விஜய் வலியுறுத்தியும், அதை கேட்காமல் பலர் இருசக்கர வாகனங்களில் விக்கிரவாண்டிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைக்குழந்தைகள், பெண்கள் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து உள்ளே அனுமதிக்க சொல்லி வாக்குவாதம் செய்து வருகிறார்கள். மாலை நேரத்தில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இப்போதே நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லும் நிலை உருவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments