Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க பதவி விலகினா நல்லா இருக்கும்: தினகரனை விளாசிய அமைச்சர் இவர் தான்!

நீங்க பதவி விலகினா நல்லா இருக்கும்: தினகரனை விளாசிய அமைச்சர் இவர் தான்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (10:07 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பன்னீர்செல்வம் வெளியே வந்தது போல தற்போது டிடிவி தினகரனுக்கு எதிராகவும் ஒரு அமைச்சர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.


 
 
நேற்று காலை அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவாறு உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதாக செய்திகள் கசிந்தன.
 
‘மேற்கு மாவட்டத்தை’ சேர்ந்த அமைச்சர் ஒருவர் தான் இது குறித்து அந்த கூட்டத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார். உங்களோடு அதிகப்படியான தொடர்பில் இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரெய்டு போனாங்க. அவரால் இன்று கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வந்துவிட்டது என கூறியிருக்கிறார் அந்த மேற்கு மாவட்ட அமைச்சர்.
 
மேலும் விஜயபாஸ்கரை இப்போதைக்கு அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நம்மீது இருக்கும் கெட்டப்பெயரை மாற்ற முடியும். இந்த நேரத்தில் நீங்களும் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினால் அது கட்சிக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்றார் ஒரே போடாக.
 
இதனை சற்றும் எதிர்பார்க்காத தினகரன் அதிர்ந்து விட்டாராம். அதன் பின்னர் அமைச்சர்களிடம் பேசிய தினகரன் அவர்களை சமாதானம் செய்யும் வகையில் பேசினாராம். சசிகலா, ஜெயலலிதா புராணம் பாடியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இதனை மறுக்கும் விதமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments