Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்கு வித்யாசாகர் ராவ் கொடுத்த அதிர்ச்சி: புதிய ஆளுநர் நியமனத்தின் பின்னணி!

டெல்லிக்கு வித்யாசாகர் ராவ் கொடுத்த அதிர்ச்சி: புதிய ஆளுநர் நியமனத்தின் பின்னணி!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (12:11 IST)
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய முழு நேர ஆளுநராக மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.


 
 
பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதுக்கு பின்னணியில் பகீர் காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
 
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த வித்யாசாகர் ராவ் தமிழக சட்டமன்றத்தை முடக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
 
வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது கடும் கோபத்தில் இருந்ததால் எந்தவித சமாதானத்துக்கும் அவர் உடன்படவில்லை என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 18 எம்எல்ஏக்கள் தகுநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் எதிர் கட்சிகளால் ஆளுநரும் விமர்சிக்கப்பட்டார்.
 
இதனால் தனது பெயர் தேவையில்லாமல் டேமேஜ் ஆவதை விரும்பாத வித்யாசாகர் ராவ் தனது முடிவான தமிழக சட்டமன்றத்தை முடக்குவதை செயல்படுத்திவிடுவார் என அஞ்சி தான் டெல்லி மேலிடம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் பொறுப்பிலிருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு பன்வாரிலால் புரோஹித் புதிய முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments