Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயம் செய்யப் போகிறார் நடிகர் விஷால்!

விவசாயம் செய்யப் போகிறார் நடிகர் விஷால்!
, திங்கள், 6 ஜூன் 2016 (17:46 IST)
பிரபல தமிழ் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷால் தஞ்சாவூரில் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.


 
 
திருத்துறைப்பூண்டி அருகே நடைபெற்ற நெல் திருவிழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால், விவசாயிகளுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாறவேண்டும் என்றார்.
 
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளதாகவும், அது தன்னுடைய நீண்ட நாள் விருப்பம் எனவும் கூறினார் விஷால்.
 
பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும்.
 
சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிரச்சனை இருக்கவே செய்கிறது. கடன் உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக்கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல என விஷால் நெல் திருவிழாவில் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன டாய்லெட் பேப்பரில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்