விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவர் பலி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (10:15 IST)
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனுமதி பெறாத பட்டாசு ஆலைகளில் தான் அதிகமான அளவு விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 5 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நின்றாலும் தங்கம் விலை உயரவில்லை.. இன்றும் சரிவு.. சென்னை நிலவரம்..!

டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம்..!

14.2 கிலோ சிலிண்டருக்கு பதில் இனிமேல் 10 கிலோ சிலிண்டர் தானா? பொதுமக்கள் அதிருப்தி?

உன்னால தான் ஈரான் போரை தொடங்கினேன்.. பாதுகாப்பு செயலர் மீது பழியை தூக்கி போட்ட டிரம்ப்..!

முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிடும் விஜயன்.. பெயர் குழப்ப யுக்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments