விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு..!

Siva
ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:44 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் போர்மேன் சுரேஷ்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவருக்கு போலீசார் வலைவீசியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வரும் நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சித்தறியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
 
இந்த விபத்தில் கட்டிடத்தில் 5 அறைகள் தரைமட்டமாகியதாகவும், அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் சிலர்  படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்து குறித்து வெம்பகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments