Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர் சேவாக்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (16:02 IST)
வெற்றிபெற்ற தமிழக மக்களுக்கு எனது அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டம் இயற்ற கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இருந்து காளையை நீக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். ஆனால் பிரதமர் மோடி நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, தன்னால் எதுவும் செய்ய இயலாது எனக் கைவிரித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மேலும் உக்கிரமானது. லட்சக்கணக்கானவர்கள் பகலிலும், இரவிலும் சென்னை மெரீனா, கோவை வ.உ.சி. மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை அவசரச் சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர். அதே சமயம் நேற்று திங்கட்கிழமை மாலை அவசரமாகக் கூட்டப்பட்ட மாநில சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரந்திர சேவாக், “வெற்றிபெற்ற தமிழக மக்களுக்கு எனது அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments