Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து ஏமாற்றியதால் பழி வாங்கினேன் : வினுப்பிரியா வழக்கில் குற்றவாளி வாக்குமூலம்

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (15:33 IST)
தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதால் பழி வாங்கவே, வினுப்பிரியாவை ஆபசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக, கைதான சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


 

 
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கனசாலை புவன கணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரதுமகள் வினுப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரின் புகைப்படங்கள், மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வினுப்பிரியா அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
போலீசர் விசாரணையில், அதில் ஏர்சல் நிறுவன மொபைல் எண் மூலம் ஆபாச படம் வெளியிடப்பட்டது தெரியவந்தது. இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(22) என்பவர் தான், அந்த புகைப்படத்தை வெளியிட்டது என்பது தெரியவந்ததை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். 
 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அவர் தான் ஃபேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிட்டது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் “ நானும் வினுப்பிரியாவும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினுப்பிரியாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதனால் அவர் என்னை தவிர்க்க ஆரம்பித்தார். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவரது வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோர்களிடம் பெண் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர். 
 
இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரை பழிவாங்க திட்டமிட்டு, அவரின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடேன். அவர் தற்கொலை செய்து கொண்டதால், வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டு பிடித்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments