Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளவங்கோடு தொகுதி காலி..! அரசிதழில் வெளியீடு..!!

Senthil Velan
புதன், 28 பிப்ரவரி 2024 (15:21 IST)
பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தேதி முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த வாரம் அவர், பாஜகவில் இணைந்தார். தனது எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார்.
 
அவரது ராஜினாமாவை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார்.
 
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ராஜினாமா செய்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

ALSO READ: திமுக அழியும் என சொன்னவர்கள் காணாமல் போய்விட்டனர்..! பிரதமர் மோடிக்கு கனிமொழி பதிலடி.!!
 
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், பொன்முடியின் எம்.எல்.ஏ., பதவி காலியானது. ஆனாலும், அவர் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட, திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments