Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...!!

Senthil Velan
வியாழன், 20 ஜூன் 2024 (15:52 IST)
ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 
 
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானதை அடுத்து, இத்தொகுதி காலியான தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது.
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் பனையூர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ALSO READ: வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக அமித் சிங் பன்சல் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். செலவின பார்வையாளராக மனிஷ் குமார் மீனா ஐ.ஆர்.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments