புத்தாண்டு தினத்தில் தொண்டர்களை சந்திக்க வந்த விஜயகாந்த்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (15:24 IST)
நடிகர் விஜய்காந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வந்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்துள்ளது. இதற்காக அவர் சில முறை வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து திரும்பினார். உடல்நிலை காரணமாக அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் இருந்து விலகி, வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு பதிலாக கட்சி சம்மந்தமான பணிகளை அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று புத்தாண்டு தினம் என்பதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுக்கு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாக அளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments