Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டணி அமைப்பது குறித்து பூசாரியிடம் குறி கேட்ட விஜயகாந்த்

கூட்டணி அமைப்பது குறித்து பூசாரியிடம் குறி கேட்ட விஜயகாந்த்
, செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (17:01 IST)
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் திருமங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

 


 
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் திமுக, மக்கள் நலன் கூட்டணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் இருக்கிறது. இந்நிலையில், கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பாகவும் அவர் குலதெய்வம் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருப்பதி ஆலயம் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இந்நிலையில், விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேற்று இரவு கார் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார். பின்னர், திருப்பரங்குன்றம் கோவில் மலைக்கு பின்புறம் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவில் குடும்பத்துடன் தங்கினார். அவரை மதுரை மாவட்ட கட்சி பிரமுகர்கள் கூட்டணி குறித்து சந்தித்து பேசியுள்ளார்.
 
இதையடுத்து, இன்று காலை மனைவியுடன் காரில்  திருமங்கலம் அருகே உள்ள வீர சின்னம்மாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து அந்த கோவிலில் உள்ள பூசாரியிடம் "குறி" கேட்டு உள்ளார். அப்போது, அந்த கோவில் பூசாரி எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற முடியும் என்பதை அவரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அந்த கோவிலில் தரிசனம் முடித்த பின்னர் மீண்டும் விடுதிக்கு வந்தார். அப்போது அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்தனர். அவர்களுடன் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
இதையடுத்து, இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil