Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தின் வெளிநாட்டு பிளான்: தேர்தல் தோல்வி பயம்?

Webdunia
வியாழன், 5 மே 2016 (14:52 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


 
 
இந்த தேர்தலில் தான் முதல்வர் ஆகாவிட்டால் வெளிநாடு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். தான் இந்த தேர்தலில் முதல்வர் ஆக மாட்டேன் என்பது தெரிந்து தான் விஜயகாந்த் இப்படி ஒரு திட்டத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் அந்த தொகுதியில் வெற்றி பெறுவதே சந்தேகம் தான் என விஜயகாந்துக்கு தகவல்கள் சென்றதால், தேர்தல் முடிந்த கையோடு வெளிநாடு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
விஜயகாந்த் வழக்கமாக தனது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுல செல்வது வழக்கம். இந்த முறை தேர்தலில் தாங்கள் பின்னடைவை சந்திப்போம் என விஜயகாந்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளதால் தற்போது வெளிநாட்டு பயணத்தை கையில் எடுத்துள்ளார் விஜயகாந்த்.
 
சில நாட்கள் வெளிநாட்டில் தங்கி இருந்துவிட்டு பின்னர் சென்னை திரும்ப அவர் திட்டமிட்டிருப்பதாகவும், விஜயகாந்தின் தொண்டை பிரச்னைக்கு சிகிச்சை பெறவும், தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'தமிழன் என்று சொல்' படத்தின் சூட்டிங்கிற்காக தேர்தல் முடிந்த கையோடு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments