Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவுடன் கூட்டணி இல்லை : விஜயகாந்த்

திமுகவுடன் கூட்டணி இல்லை : விஜயகாந்த்

திமுகவுடன் கூட்டணி இல்லை : விஜயகாந்த்
, ஞாயிறு, 10 ஜனவரி 2016 (08:53 IST)
அதிமுக மற்றும் திமுக கட்சிகள் எனக்குப் பிடிக்காது என்றும், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அடுத்த மாதம் சொல்கிறேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

 
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது மற்றும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
அந்த கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடுவு எடுக்க கூடிய முழு அதிகாரம் விஜயகாந்திற்கு வழங்குவது உட்பட மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின் விஜயகாந்த் பேசியதாவது:
 
“தமிழகத்தில் எவ்வளவோ போராட்டங்கள் நடக்கின்றன. அவர்களை விட்டு விட்டு தேமுதிகவினரை மட்டும் போலிசார் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். பார்த்தசாரதி எம்.எல்.ஏவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
ஆனால், இப்போது அவர் இந்த கூட்டத்துக்கு வந்து விட்டார். அவரை வரவிடாமல் தடுத்திருந்தால், இந்த கூட்டம் முடிந்ததும் நேராக ஜெயலலிதாவின் வீட்டு முன்பு சென்று உட்கார்ந்து போராட்டம் நடத்தியிருப்பேன்.
 
ஜெயலலிதா மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரில் இருந்து இறங்கி நேரடியாக சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. முதலீட்டாளர் மாநாட்டால் எந்த பயனும் இல்லை. யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எல்லாம் ஏமாற்று வேலை.
 
எனக்கு திமுக, அதிமுக கட்சிகளை பிடிக்காது. அடுத்த மாதம் கட்சியின் மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் தொண்டர்கள் முன் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன். இப்போது சொல்ல மாட்டேன்” என்று விஜயகாந்த் பேசினார்.
 
விஜயகாந்த் திமுக பக்கம் செல்வார் என்று பலர் நினைத்தனர். ஆனால் அவரின் இந்த பேச்சு, திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதையே காட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil