Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது அபாயத்தில் விஜயகாந்த்?

கைது அபாயத்தில் விஜயகாந்த்?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (15:14 IST)
கல்லூரி மாணவனின் மர்ம மரணம் குறித்த விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
காஞ்சிபுரம் மாமண்டூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்துற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
 
இந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவர் சிவசுப்பிரமணியன், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கல்லூரி வளாகத்தினுள் மர்ம மரணம் அடைந்தார்.
 
மாணவர் மின்சாரம்தாக்கி இறந்ததாக கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மாணவன் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர்கள் படாளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த வேண்டும் என நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த நிலையில், மாணவன் பிரகாஷ் மரணம் குறித்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
 
இது குறித்து, காவல்துறை தரப்பில் விசாரித்த போது, சிபிசிஐடி விசாரணை வைத்தால், விசாரணையின் போது, குற்றப்பத்திரிக்கையில் விஜயகாந்த் பெயரும் சேர்க்க வேண்டி வரும். அப்போது, விசாரணைக்கு ஒத்துழைக்காதபட்சதில் அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினர். 

சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் ரூ.572 கோடியாக உயர்வு..!

பொறியியல் படிப்புக்கு குவிந்தது விண்ணப்பங்கள்: கலந்தாய்வு எப்போது?

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை முன்னெச்சரிக்கை..!

உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகள் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments