Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா மரணத்தில் மோடி மீது சந்தேகம்: விஜயதாரணி அதிரடி!

ஜெயலலிதா மரணத்தில் மோடி மீது சந்தேகம்: விஜயதாரணி அதிரடி!

ஜெயலலிதா மரணத்தில் மோடி மீது சந்தேகம்: விஜயதாரணி அதிரடி!
, திங்கள், 12 டிசம்பர் 2016 (08:57 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்தார். இவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.


 
 
இந்த மர்ம மரணத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உண்மையை கொண்டு வர வேண்டும் என நடிகை கௌதமி உள்ளிட்ட பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால் பிரதமர் மோடி மீதே சந்தேகத்தை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. இதற்கு காரணம் பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல் டுவீட் தான்.
 
இது குறித்து பேசிய விஜயதாரணி, அப்போலோ மருத்துவமனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரவு 11.30 மணிக்கு இறந்ததாகக் கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது நாட்டின் பிரதமர் 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய்தியை கொடுத்தார்.
 
அதிகாரப்பூர்வமாக இறப்புச் சான்றிதழில்கூட இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்றுதான் இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய்தியை கொடுத்தார் என்று பார்க்கும்போது இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
 
மேலும் முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. முதல்வர் இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவோ அல்லது தமிழக அரசோ உண்மைகளை மக்களிடம் கூற வேண்டும் என விஜயதாரணி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வர்தா புயல்: சென்னையை பிரிச்சு மேயும் கனமழையுடன் கூடிய பலத்த காற்று!