கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள மின்விசிறிகளை கொடுத்த விஜய்வசந்த் எம்பி!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (15:35 IST)
கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் சொந்த பணத்தை கொடுத்த விஜய்வசந்த் எம்பி
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவ கட்டுபடுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. 
 
இந்தநிலையில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் ஆகியோர் தங்களது தொகுதி நிதியில் இருந்து பணத்தை ஒதுக்கி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார் அவர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும் தொகையை எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த பணத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் ஒன்றுக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான மின்விசிறிகளை விஜய்வசந்த் வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு சொந்த செலவில் 2.50 லட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினேன்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments